நீதியமைச்சராக சுசில் பிரேமஜயந்த நியமனம்

புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

அந்தவகையில், நீதி, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை இவர்கள் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதேவேளை இராஜாங்க அமைச்சர்கள் ஐவர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அந்தவகையில், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக எஸ்.எம்.சந்திரசேனவும், சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் வசந்த பெரேராவும், சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சராக சாலிந்த திஸாநாயக்கவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அத்தோடு, போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக சி.பி.ரத்னாயக்கவும், நிதி இராஜாங்க அமைச்சராக அனுர பிரியதர்ஷன யாப்பாவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.






Related News

  • எந்தவொரு சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை
  • ராஜபக்சே அணி எம்பிக்களால் சுற்றி வளைக்கப்பட்ட சபாநாயகர்
  • ராஜபக்சேவுக்கு பெரும் தோல்வி – நாடாளுமன்றத்தில் கடும் அமளி
  • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
  • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
  • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
  • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
  • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *