சுஷ்மா சுவராஜ் நியூயார்க் சென்றடைந்தார்

ekuruvi-aiya8-X3

Sushma-Swarajஅமெரிக்காவில் 72-வது ஐ.நா. பொதுச்சபை  கூட்டம் நடைபெறுகிறது. உலகத்தலைவர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் இந்தியா சார்பாக கலந்து கொள்வதற்காக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்  நியூயார்க் சென்றடைந்தார்.

நியூயார்க் விமான நிலையத்தில் இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா மற்றும் ஐ.நா. சபைக்கான இந்திய பிரதிநிதி சையத் அக்பருதின்  ஆகியோர் சுஷ்மா சுவராஜை வரவேற்றனர்.

சுஷ்மா சுவராஜ் அமெரிக்காவில் தங்கி இருக்கும் 1 வார காலத்தில் தீவிரவாதம், பருவநிலை மாற்றம் மற்றும் அமைதியை பாதுகாத்தல் போன்றவை குறித்து ஆலோசனை செய்யப்படும் என அக்பருதின் தெரிவித்தார். நியூயார்க் நகரில் 20 நாடுகளின் தலைவர்களை சுஷ்மா சந்தித்து பேசுகிறார்.

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன், ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரி டாரோ கோனோ ஆகியோருடனான முத்தரப்பு கூட்டத்தில் சீனாவின் எல்லை மீறல் குறித்து ஆலோசனை செய்யப்படும் என தெரிகிறது. மேலும், ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்த்திருத்தங்கள் செய்வது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திலும் சுஷ்மா பங்கேற்கிறார்.

Share This Post

Post Comment