தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்

ekuruvi-aiya8-X3

surjit_signபஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்- மந்திரியும் தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் உடல் நலக்குறைவால் சண்டிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

சுர்ஜித் சிங் பர்னாலா 1990 முதல் 1991 வரையும், 2004 முதல் 2011 வரையும் இரண்டு முறை தமிழக ஆளுநராக பதவி வகித்துள்ளார். 1985 முதல் 87 வரை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்துள்ளார்.

வாஜ்பாய் அமைச்சரவையில் ரசாயனத்துறை அமைச்சராகவும் பர்னாலா பதவி வகித்துள்ளார். லக்னோவில் சட்டம் பயின்ற பர்னாலா சுதந்திர போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட 4 மாநில கவர்னராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment