பத்திரிகையாளர்கள் அவமதிப்பு வழக்கு: சூர்யா உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகளுக்கு பிடிவாரண்ட்

suriaகடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் புயலை கிளப்பியது. கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி தனது வாக்குமூலத்தில் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்று கூறியதாக சில ஊடங்கள் அந்த நடிகைகளின் படத்துடன் செய்தி வெளியிட்டது.

இதனால் சினிமா உலகில் பெரிய சர்ச்சை கிளம்பியது. பத்திரிகையாளர்களுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பினர். நடிகைகளுக்கு ஆதரவாகவும், பத்திரிகைகளுக்கு எதிராகவும் கண்டன கூட்டம் நடத்தினர். அந்த கண்டனக் கூட்டத்தில் நடிகர்கள் பலரும் பத்திரிகையாளர்கள் பற்றி தரக்குறைவாக பேசினர்.

இதையடுத்து, பத்திரிகையாளர்களை கடுமையாக விமர்சித்த நடிகை ஸ்ரீபிரியா, சத்யராஜ், விஜயகுமார், சரத்குமார், சூர்யா, அருண் விஜய், விவேக், இயக்குனர் சேரன் உள்ளிட்ட 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் பத்திரிகையாளர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைக்கு சம்பந்தப்பட்ட நடிகர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டும் அவர்கள் ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சூர்யா உள்ளிட்ட மேற்சொன்ன 8 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது உதகை குற்றவியல் நீதிமன்றம்.


Related News

 • சர்கார் – வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்
 • ‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது
 • ரஜினியின் 2.0 வெளியிடுவோம் – தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்
 • சர்கார் படம் முதல் நாள் ரூ. 66.6 கோடி ரூபாய் வசூல்
 • சர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை
 • சினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம் – அமிரா தஸ்தூர்
 • சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்
 • என்னை படுக்கைக்கு அழைத்த பெரிய டைரக்டர் – யாஷிகா புகார்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *