5 மாநில சட்டசபை தேர்தல் – மத்திய பட்ஜெட்டை தள்ளிவைக்குமாறு உத்தரவிடமுடியாது – சுப்ரீம் கோர்ட்டு

supreme_court5 மாநில சட்டசபை தேர்தல் காரணமாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை தள்ளிவைக்குமாறு உத்தரவிட முடியாது என்று கூறி பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. 2017-2018-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால், பட்ஜெட்டில் மத்திய அரசு சலுகைகளை அறிவிக்கக்கூடும் என்றும், இது வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதன் காரணமாக பிப்ரவரி 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன.

மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக எம்.எல்.சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்வது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்றும், பட்ஜெட் அறிவிப்புகள் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், பட்ஜெட் தாக்கல் செய்வதை தேர்தல் முடியும் வரை தள்ளிவைக்குமாறு உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த பொதுநல மனு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் பட்ஜெட் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உறுதியான ஆதாரம் எதையும் மனுதாரர் தெரிவிக்கவில்லை என்றும், மத்திய பட்ஜெட்டை மாநில சட்டசபை தேர்தல்களுடன் தொடர்புபடுத்த முடியாது என்றும் கூறினார்கள்.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் வாக்காளர்களுக்காக பட்ஜெட்டில் மத்திய அரசு சலுகைகள் அறிவிக்கலாம் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், எனவே பட்ஜெட் தாக்கல் செய்வதை தள்ளிவைக்குமாறு உத்தரவிட முடியாது என்றும் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.


Related News

 • தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை 6 மாதத்தில் மீட்க வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
 • முதல்வர் பழனிசாமி மீது சி.பி.ஐ., விசாரணை கூடாது – லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல்
 • கங்கை நதி தூய்மையாகும் என்கிறார் நிதின் கட்கரி
 • முஸ்லிம் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டார் ரஹானா
 • ஜெயலலிதாவின் இறுதி சடங்கிற்கு அரசு செலவு எவ்வளவு?
 • திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2வது நாளாக ஆய்வு
 • இந்திய துணை கண்டத்தில் அதிக திட்டங்களை கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு
 • தீபாவளி சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் இல்லை
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *