சுப்ரமணியசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார் சோனியாவின் மருமகன்

ekuruvi-aiya8-X3

Tamil_News_large_1550679_318_219பொதுவாக பா.ஜ., எம்.பி., சுப்ரமணியசாமி தான் மற்றவர்களை கடுமையாக தாக்கி விமர்சிப்பார். ஆனால் காங்., தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா தனது முகப்புத்தகத்தில் சுப்ரமணியசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

வெளிநாட்டிற்கு செல்லும் இந்திய அமைச்சர்கள் இந்திய கலாச்சார உடைகளையே அணிய வேண்டும் என பா.ஜ., உத்தரவிட வேண்டும். கோட்டை அணிந்து செல்லும் அமைச்சர்களை பார்க்கையில் வெயிட்டர்களை போல் உள்ளது என கடந்த சில நாட்களுக்கு முன் சுப்ரமணியசாமி கூறி இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ராபர்ட் வத்ரா, கடுமையாக உழைத்து வாழும் வெயிட்டர்களை அவமதிப்பது போன்று உள்ளது சுப்ரமணியசாமியின் கருத்து. இது மிகவும் வேதனை அளிக்கிறது. மற்றவர்கள் கவனத்தை தன் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக பா.ஜ., எம்.பி., இவ்வாறு பேசி வருகிறார் என தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment