ரொறொண்ரோ நல்லூர் கந்தசாமி கோவில் புதிய ஆலய திருப்பணி சித்திரைத் திருவிழாவினை முன்னிட்டு அசத்தப்போவது யாரு குழுவினர் வழங்கும் காமெடி கலாட்டா நகைச்சுவை நிகழ்ச்சிகள், நகைச்சுவை பட்டிமன்றம் ஆகியனவும் சுப்பர் சிங்கர் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரு குழுவினரும் இன்று கனடா வந்திறங்கியுள்ளனர்.
20 டூறம் , ஸ்கார்போரோ, கனடா என்ற முகவரியில் அமைந்துள்ள ஸ்கார்போரோ மாநாட்டு மையத்தில் எதிர்வரும் ஏப்ரல் 22 ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முதல் காட்சி நண்பகல் 12 மணிக்கும் , இரண்டாம் காட்சி மாலை 6.30 மணிக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுச் சீட்டுக்களைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 416 878 8456