உடல் உரசும் சுகத்துக்கு உயிர் பலிதான் விருந்தோ..?

17796710_405451283154751_6924128065740120550_n

உடல் உரசும் சுகத்துக்கு
உயிர் பலிதான் விருந்தோ..?
இங்கு எதுவுமே சரியில்லை
எல்லாமே தலை கீழாகி விட்டது..

மனக் கதவுகள் அடைபட்டு
மயானக் கதவுகள் திறந்து
கிடக்கிறது..
இங்கு புதைக்கப் படுவது
விதைகள் மாத்திரமே…

சரீர இச்சையின் எச்சங்களாக
சரிந்து கிடக்கிறது பல
சரித்திரத்தின் விதைகள்..

நாடி நரம்பு புடைக்க நரை
மாமிசத்தை புணர்ந்து
பூட்டிய அறைக்குள் புதையல்
தேடினீரோ..???

பின் தோண்டிய புதையலை ஏன்
மீண்டும் புதைத்தீர்…???

உங்கள் சிணுங்கல்களுக்கு
இடையே சிக்கிய உயிர் துளி
சிதையும் அலறல் கேட்க
வில்லையோ…..???

கொலை புரிவதுதான் உங்கள்
குறியின் குறிக்கோள் எனில்
அறுத்தெறியுங்கள்
இன்னோர் சரித்திரம்
அளியாதிருக்கட்டும்…

-மதி


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*