உலக சுகாதார தாபனத்தின் விசேட நிபுணர்கள் குழு இலங்கை விஜயம்

whoஉலக சுகாதார தாபனத்தின் விசேட நிபுணர்கள் குழுவொன்று எதிர்வரும் 27ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக மலேரியா தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மலேரியா நோய் நிலைமை தொடர்பில் ஆய்வு செய்து, இலங்கை மலேரியா நோய் அற்ற நாடு என்பதை உறுதிப்படுவதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்கு இந்த குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக அவர் கூறினார்.

எதிர்வரும் 27ம் திகதி முதல் இரண்டு வார காலம் அந்தக் குழுவினர் இலங்கையில் தங்கியிருப்பார்கள்.

கடந்த 03 வருட காலத்திற்குள் இலங்கையில் மலேரிய நோயாளர்கள் எவரும் பதிவாகி இருக்கவில்லை என்று வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment