விக்ராந்த், மிஷ்கின், சுசீந்திரனின் சுட்டுப்பிடிக்க உத்தரவு

ekuruvi-aiya8-X3

Vikranth-Mysskin-Suseenthiranதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன். அதே போல் வளர்ந்து வரும் நடிகர் விக்ராந்த். இந்த மூன்று பிரபலங்களுக்கும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று நேற்று புதிர் வைத்தார் விக்ராந்த். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை இன்று வெளியிட்டிருக்கிறார்கள்.
அதன்படி ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் விக்ராந்த், மிஷ்கின், சுசீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார்.

Share This Post

Post Comment