சுட்டுக் கொல்லப்பட்ட சீனிவாசனுக்கு இரங்கல் தெரிவித்து அமெரிக்காவில் இந்தியர்கள் ஊர்வலம்

ekuruvi-aiya8-X3

3CEBD1D2-24C5-4470-8D5A-266E45D0FE6F_L_styvpf-450x256அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட பெங்களூரு பொறியாளர் சீனிவாசனுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமான நூற்றுக்கணக்கான இந்தியர்கள் ஊர்வலம் நடத்தினர்.

அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் இந்தியாவின் ஹைதராபாதைச் சேர்ந்த பொறியாளர் சீனிவாஸ் குச்சிபோதலா (32) கடந்த புதன் கிழமை அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவரால் இனவெறியுடன் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் உடன் பணிபுரியும் மற்றொரு என்ஜினீயர் அலோக் மதசானி மற்றும் அமெரிக்கர் ஒருவரும் காயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் கன்சாஸ் புறநகரான ஒலாதே பாரில் இந்திய என்ஜினீயர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, கொல்லப்பட்ட சீனிவாசின் உடல் சொந்த ஊரான ஐதராபாத்திற்கு இன்று கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட பெங்களூரு பொறியாளருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமான நூற்றுக்கணக்கான

இந்தியர்கள் கன்சாஸ் நகரில் ஊர்வலம் நடத்தினர். மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலியும் செலுத்தினர்.

குற்றங்கள் வேண்டாம், இது டிரம்பின் அமெரிக்கா போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

அதேபோல், சீனிவாசன் மறைவிற்கு கன்சாஸ் நகரில் இந்தியர்கள் சார்பில் இரங்கல் கூட்டமும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இந்தியர்கள் கலந்து கொண்டனர்.

Share This Post

Post Comment