கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் தந்தார்- சுப்பிரமணியசாமி

ekuruvi-aiya8-X3

subramanian-swamyஇந்திய கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வபோது தாக்குதல் நடத்துகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில் இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து தமிழகத்தில் போராட்டம் வெடித்தது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையானது மீண்டும் வலுத்தது, அரசியல் கட்சிகள் ஒருவரை, ஒருவர் குற்றம் சாட்ட தொடங்கினர்.

மத்திய அரசும் இவ்விவகாரத்தில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் தந்தார் என குற்றம் சாட்டிஉள்ளார்.

இலங்கை கடற்பகுதியில், தமிழக மீனவர்கள் 3 ஆண்டுகளுக்கு மீன் பிடிக்க, மத்திய அரசு ஒப்பந்தம்செய்ய வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி கூறி உள்ளார்.

Share This Post

Post Comment