எம்.எல்.ஏ.,க்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

ekuruvi-aiya8-X3

stalin_0312கட்சியின் கீழ்மட்டத்தில் இருக்கும் நிர்வாகிகளை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக, சென்னை, அறிவாலயத்துக்கு அனைவரையும் வரவழைத்து, ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் நடந்த போது, நெல்லை தொகுதி சட்டசபை உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் மீது ஏகப்பட்ட புகார்களை அள்ளி வீசினர். உறுப்பினர், ஓட்டல் வைத்து நடத்திக் கொண்டு, தொகுதி மக்களை சந்திக்கவே மறுத்து வருகிறார். ஆளும் கட்சிக்காரர்களுடம் சேர்ந்து கொண்டு, அரசு திட்டங்கள், செயல்பாடுகளில் பணம் பார்ப்பதிலேயே குறியாக இருக்கிறார் என்றெல்லாம், புகார் கூறியுள்ளனர்.

அதிர்ந்து போன லட்சுமணன், தன்னுடைய விளக்கமாக சொல்லும்போது, என்னை பற்றி குறை கூறுபவர்களை, பக்கத்துத் தொகுதியான பாளையங்கோட்டையின் எம்.எல்.ஏ.,வான டி.பி.எம்.மைதீன் கான் தூண்டுதலில்தான், குறை கூறுகின்றனர். அவர், பாளையங்கோட்டை தொகுதி பக்கமே செல்வதில்லை. அதை முதலில் சரி செய்ய வேண்டும் என, கூறினார். இதன் தொடர்ச்சியாக, மைதீன்கான் பேசி விளக்கம் அளித்தார்.

ஆனால், அதை ஏற்காத ஸ்டாலின், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்கு சென்று, மக்களை சந்திக்காதது அப்பட்டமாக வெளிவந்து விட்டது. இனியாவது, இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வராமல், தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார். இதே போன்ற குற்றச்சாட்டு, தி.மு.க.,வின் பல எம்.எல்.ஏ.,க்கள் மீதும் இருப்பதால், அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் தொகுதி பக்கம் போய், மக்கள் பணியாற்ற ஸ்டாலின் கடும் உத்தரவு போட்டிருப்பதோடு, தொடர்ந்தும், தொகுதி பக்கம் போகவில்லை என்றால், அடுத்த தேர்தலில் சீட் கிடையாது என்றும் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Share This Post

Post Comment