வழக்குகளை கண்டு அஞ்ச மாட்டோம் – ஸ்டாலின்

Facebook Cover V02

stalin-0405கோவையில் குட்கா தொழிற்சாலையை கண்டுபிடித்து போலீசார் சோதனை நடத்திய போது, ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்வதாக திமுகவினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து , 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனை கண்டித்து கோவையில் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். வழக்குப்பதிவு செய்து இரவோடு இரவாக வீடுகளில் சென்று, திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

வழக்குகளைகண்டு அஞ்ச மாட்டோம் ஒடுங்கிவிட மாட்டோம். வழக்குகளை கண்டும் அஞ்சும் இயக்கம் திமுக அல்ல. கோவை எஸ்பி , ஆளுங்கட்சி உத்தரவு மற்றும் கோவையில் உள்ள ஆளுங்கட்சியினரின் நெருக்கடி காரணமாக திமுகவினரை கைது செய்துள்ளார். வழக்குப்பதிவு செய்தவர்கள், அடுத்து அமையும் திமுக ஆட்சிக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று அவர் பேசினார்.

Share This Post

Post Comment