டில்லியில் போராடும் விவசாயிகளுடன் ஸ்டாலின்

Thermo-Care-Heating

Tamil_News_large_1742957_318_219டில்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாய சங்கத்தினர் கடந்த 19 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், திமு.க., எம்.பி., கனிமொழி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டில்லி சென்று விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அவருடன் எம்.பி.,க்கள் டிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா உள்ளிட்டோர் சென்றனர்.

தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், விவசாயிகள் பிரச்சனையை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. இது வேதனை அளிக்கிறது. பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கேட்டேன். ஆனால் நேரம் ஒதுக்கவில்லை.

ideal-image

Share This Post

Post Comment