இலங்கையின் புதிய யாப்பிற்கான முதற்கட்ட அறிக்கைகள் பற்றிய மக்கள் சந்திப்பு:

ekuruvi-aiya8-X3

இலங்கையின் புதிய யாப்பிற்கான முதற்கட்ட அறிக்கைகள் பற்றிய மக்கள் சந்திப்பு:

புதிய யாப்பிற்கான அறிக்கைகள் பற்றிய மக்கள் கலந்த்துரையாடலின் தொடர்ச்சியில் அடுத்ததாக மார்க்கம் நகரில் இடம்பெற உள்ளது.

காலம்: வெள்ளிக்கிழமை நொவெம்பெர் 17ம் திகதி

நேரம்: மாலை 6:00 மணியிலிருந்து 8:30 மணிவரை

இடம்: Erra Palace (10 Karachi Dr, Markham, ON L3S 0B5)

ஈழத்தமிழர்களின் தொடர்ச்சியான உரிமைப் போராட்டத்தில் இன்று ஒரு முக்கியமான கால கட்டத்தில் இருக்கின்றோம். இதுவரையிலும் உருவாக்கப்பட்ட யாப்பில் ஈழத்தமிழர்களுடைய பங்கில்லாமல், ஈழத்தமிழர்களை ஒரு அடிமைப் படுத்தும் யாப்பாகவே வரையப்பட்டிருந்தது. இப்போது புதிதாக கொண்டுவர முயற்சிக்கும் யாப்பு தமிழர்களையும் இணைத்தே உருவாக்கப்படுகின்றது என்ற தொனியில் பேசப்படுகின்றது. இப்படியான ஒரு சூழலில் நாம் இந்த அறிக்கைகள் பற்றிய ஆழமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு கனடியத் தமிழர்களாக எமது பார்வையை எமது தாய்த் தமிழீழ மக்களுக்கும், உலகிற்கும் கூற வேண்டிய கடமை எமக்கிருக்கின்றது.

இக் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு, அனைவரும் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தொரிவிக்க வேண்டும் என வேண்டிக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை 416.830.7703unnamed

Share This Post

Post Comment