சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்த ஸ்ரீதேவி ஒரு சகாப்தம்

ekuruvi-aiya8-X3

sridevi_0தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்ட நடிகை ஸ்ரீதேவி இந்திய திரைப்படத் துறையில் புகழ் பெற்று விளங்கினார். 1969ம் ஆண்டு இயக்குநர் எம் ஏ திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த ‘துணைவன்’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு குழந்தை நட்சத்திரமாக ‘நம்நாடு’ கனிமுத்து பாப்பா’ ‘வசந்த மாளிகை’ போன்ற பல படங்களில் நடித்தார். இவர் கதாநாயகியாக அறிமுகமானது 1976ம் ஆண்டு இயக்குநர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘மூன்று முடிச்சு’ திரைப்படமாகும். 1977ம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

அதன் பின் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடனும் சில படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது. அதன் பின் மலையாள திரைப்படங்களிலும் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதற்கு சான்றாக ‘ஆலிங்கனம்’ குட்டவும் சிக்ஷையும்’ ‘ஆத்ய பாடம்’ ‘ ஆ நிமிஷம்’ போன்ற திரைப்படங்களை கூறலாம்.

sridevi_001975ம் ஆண்டு இயக்குநர் கே எஸ் சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜுலி’ என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1978ல் வெளிவந்த சோல்வா சாவன்’ (16 வயதினிலே) என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் இயக்குநர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி கண்ட ‘மூன்றாம் பிறை’ திரைப்படம் ஹிந்தியில் சத்மா’ என்ற பெயரில் வெளிவந்து வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீதேவிக்கு புகழையும் தேடித்தந்தது.

அதன் பின் வெளிவந்த ‘ஹிம்மத்வாலா’ ‘சாந்தினி’ திரைப் படங்களின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் ஸ்ரீதேவியும் இணைந்தார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்த ஸ்ரீதேவி 1996ம் ஆண்டு நடிகர் அனில்கபூரின் சகோதரரும் திரைப்படத் தயாரிப்பாளருமான போனிகபூரை மணமுடித்தார்.

அதன் பின் சினிமாவை விட்டு விலகி இருந்த ஸ்ரீதேவி 14 ஆண்டுகளுக்குப் பின் 2012ம் ஆண்டு வெளிவந்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்கலானார். இதுவரை தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஏறக்குறைய 275 படங்களில் நடித்திருக்கிறார். ஒன்றிரண்டு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார்.

நடிகை ஸ்ரீதேவி (வயது 54) துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார்.

sridevi8

sridevi9 sridevi7 sridevi6 sridevi5 sridevi4 sridevi3 sridevi2 sridevi1

Share This Post

Post Comment