கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகுகிறது இலங்கை சுதந்திரக் கட்சி

Thermo-Care-Heating

sfmஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேற இலங்கை சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நடந்த சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குமாறு இலங்கை சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியி்ருந்தனர்.

இந்த நிலையில் ஐதேக தனித்து ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதை அடுத்து, கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலக இலங்கை சுதந்திரக் கட்சியினால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பரந்துபட்ட எதிர்க்கட்சி அணியை வலுப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜனாதிபதி இன்று, இதுதொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

ideal-image

Share This Post

Post Comment