பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து

ekuruvi-aiya8-X3

SpaceXவிண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. சூரியனுக்கு அப்பால் உள்ள பூமி போன்று வாழத் தகுதியுடைய புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது.
அதற்காக ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற புதிய விண்கலத்தை உருவாக்கியுள்ளது. ‘வாஷிங் மெஷின்’ அளவுள்ள இந்த விண்கலத்தில் அதிசக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ரூ.2,200 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் நேற்று மாலை 6.32 மணிக்கு புளோரிடாவின் கேப்கனவரல் தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. ஆனால் அது ரத்து செய்யப்பட்டது. 18 ந்தேதி  அனுப்பப்படுகிறது. இதனை ஸ்பேஸ் எக்ஸ் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளது.

இந்த விண்கலம் 2 ஆண்டுகள் செயல்படும். அது 2 லட்சம் ஒளிரும் நட்சத்திரங்களையும், புதிய கிரகங்களையும் கண்டுபிடிக்கும் என ‘நாசா’ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் சூரியனுக்கு அப்பால் மறைந்து கிடக்கும் 20 ஆயிரம் புதிய கிரகங்களை கண்டுபிடிக்க முடியும். அதில் பூமி அளவில் 50 புதிய உலகங்களும் அடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Post

Post Comment