சேவாக் அணியை வீழ்த்தி ஐஸ் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது அப்ரிடி அணி

St-Moritz-Ice-Cricket-Afridis-Royals-Beat-Sehwags-Diamondsசுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் அமைந்துள்ள அழகான பகுதி செயின்ட் மோரிட்ஸ் ரிசார்ட். கடல் மட்டத்தில் இருந்து 5910 அடி உயரத்தில் உள்ள இப்பகுதியில் வித்தியாசமான முயற்சியாக பனிக்கட்டி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐசிசி) அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று நடைபெற்ற டி20 போட்டியில், சேவாக் தலைமையிலான டைமண்ட்ஸ் அணி, சாகித் அப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது..
நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அப்ரிடி தலைமையிலான ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றது.
ராயல்ஸ் அணியில் ஸ்மித், மேட் பிரையர், கல்லிஸ், ஒவாயிஸ் ஷா, சாகித் அப்ரிடி (கேப்டன்), கிராண்ட் எலியட், அப்துர் ரசாக், டேனியல் வெட்டோரி, நாதன் மெக்கல்லம், சோயிப் அக்தர், ஏ.சி. ஆண்ட்ரூஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
டைமண்ட்ஸ் அணியில் சேவாக் (கேப்டன்), ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், ஜாகீர் கான், அஜித் அகர்கர், ஜெயவர்தனே, தில்சன், மலிங்கா, மைக்கேல் ஹசி, முகமது கயிப், ரமேஷ் பொவார், ஜொகிந்தர் சர்மா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இதில் முதலில் டைமண்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான சேவாக் அதிரடியாக விளையாடினார். சேவாக் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் அதிரடியாக விளையாடி 67 ரன்கள் குவித்தார். இறுதியில் மொகமது கயிப் 57 ரன்கள் எடுக்க டைமண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. ராயல்ஸ் அணியின் பந்துவீச்சில் அப்துர் ரசாக் 2 விக்கெட்களும், டெனியல் வெட்டோரி, கிராண்ட் எலியாட் ஆகியோர் தலா ஒரு  விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதைத்தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மித், மேட் பிரையர் ஆகியோர் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 28 ஆக இருந்தபொழுது பிரையர்  ஆட்டமிழந்தார். அதன்பின் கல்லிஸ் களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய கல்லிஸ் எதிரணியினரின் பந்துவீச்சை சிக்ஸரும், பவுண்டரிகளுமாக விளாசினார்.
அரைசதம் அடித்த கல்லிஸ் 37 பந்துகளில் 13 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 90 ரன்கள் எடுத்தார். ஒவாயிஸ் ஷா 21 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். ராயல்ஸ் அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. கல்லிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 ஐஸ் கிரிக்கெட் தொடரை ராயல்ஸ் அணி 2-0 என வென்றது. ராயல்ஸ் அணியின்  ஒவாயிஸ் ஷா தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

Related News

 • ஜமால் கசோக்கி 2 மூத்த அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்- சவுதி அரேபியா ஒப்புதல்
 • பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு
 • பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’
 • அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்க உள்ளதாக தகவல்
 • பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?
 • 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை – ஆதாரம் உள்ளது துருக்கி
 • டிரம்ப் மனைவி சென்ற விமானத்தில் திடீர் புகை – விமானம் அவசரமாக தரையிறக்கம்
 • பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைதான ஷாபாஸ் ஷெரீப், நாடாளுமன்றத்தில் ஆவேசம்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *