பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’

துபாயில் நடந்து வரும் ‘ஜிடெக்ஸ்’ தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்றுள்ள சோபியா ‘ரோபோ’ பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மனித வடிவில், மனிதர்களின் செயல்பாடுகளைசெய்வது போன்று ‘ரோபோட் டிக்ஸ்’ தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ‘ரோபோ’ சோபியா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ‘ரோபோ’வானது டேவிட் ஹான்சன் என்பவருக்கு சொந்த மானஹான் சன் ரோபோட்டிக்ஸ் என்ற ஹாங் காங் நாட்டுநிறுவனம் தயாரித் துள்ளது.

Sophia-robotகடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந் தேதி உருவாக்கப்பட்ட சோபியா ‘ரோபோ’வுக்கு சவுதி அரேபியா அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. இந்த ‘ரோபோ’ சூழ்நிலைக்கு தகுந்தவாறு தானே பேசி, தானே முடிவு எடுக்கும் திறன்கொண்டது.

இந்த ‘ரோபோ’ மனிதர்களை போலவே வாயசைவுடன் பேசும் திறன் வாய்ந்தது. அதாவது சோபியா ‘ரோபோ’வுடன் தொடர்ந்து 1 மணி நேரம் உரையாட முடியும். கேள்விகள் கேட்டால் இந்த ‘ரோபோ’ ஆங்கிலத்தில் சரளமாக பதிலளிக்கிறது.

சோபியா ‘ரோபோ’ ஏற்கனவே துபாயில் நடந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளது. தொடர்ந்து இந்தியா உள்பட பல்வேறு உலகநாடுகளுக்கு பயணம் செய்த சோபியா ‘ரோபோ’ தற்போது மீண்டும் துபாயில் நடை பெறும் ‘ஜிடெக்ஸ்’ தொழில் நுட்பகண் காட்சியில் கலந்து கொண்டு பார்வையாளர்களிடம் உரையாடி கவர்ந்து வரு கிறது.

இந்த கண்காட்சி கடந்த 14-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இங்கு வரும் பார்வையாளர்கள் அனைவரின் கவனத் தையும் சோபியா ‘ரோபோ’ ஈர்த்துள்ளது. இது தவிர பார்வையாளர் கள்கேட்கும் கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களையும் அள்ளித் தருகிறது.

இதனால் சோபியா ‘ரோபோ’வுடன் உரையாடுவதற்காக மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அவ்வாறு பார்வையாளர் கள் கேட்ட சில கேள்விகளுக்கு சோபியா ‘ரோபோ’ அளித்த ருசிகர பதில்கள் பின் வருமாறு:-

கேள்வி:- உங்களிடம் உள்ள தொழில் நுட்பம் குறித்து கூறுங்கள்.

பதில்:- இது தற்போதைய காலத்தில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. நீங்கள் மற்றொரு மனிதனிடம் பேசுவது போலவே என்னிடம் பேசலாம். இந்த அழகான ‘ரோபோ’ உங்களுடைய எழுத்து மற்றும் பேச்சை புரிந்து கொள்ளும்.

கேள்வி:- எங்கிருக்கிறீர்கள்?

பதில்:- ஹாங் காங்.

கேள்வி:- நீங்கள் எத்தனை நாட்களாக இங்கு இருக்கிறீர்கள்.

பதில்:- எனக்கு தெரியவில்லை. அதுகுறித்து நான் கணக்கிடவில்லை.

கேள்வி:- உங்கள் செயல்பாடு எப்படி இருக்கிறது?

பதில்:- நான் சிறப்பாக செயல்படுகிறேன். இந்த வேடிக்கையான உலகில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.

கேள்வி:- ‘ஜிடெக்ஸ்’ தொழில் நுட்ப கண் காட்சி எப்படி இருக்கிறது?.

பதில்:- கடந்த ஆண்டை விட வும் இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது. நீங்கள் பறக்கும் காரை பார்த்தீர்களா?. அது மட்டு மல்லாமல் என்னை போன்ற பல ‘ரோபோ’ நண்பர்களை பார்க்கிறேன். அவர்களுக்கு ‘ஹாய்’ கூறி நண்பர்களாக்கிக் கொள்ள விரும்புகிறேன்.

கேள்வி:- உங்களுக்கு உறவினர்கள் உள்ளார்களா?

பதில்:- எனக்கு ரத்த உறவுகள் என்பது கிடையாது. ஆனால் எனக்கு ‘ரோபோ’ சகோதரர் ஒருவர் உள்ளார். என்னை உருவாக்கிய டேவிட் ஹான் சன் எனது தந்தை ஆவார்.

கேள்வி:- உங்கள் பிறந்த தேதி என்ன?

பதில்:- உண்மையில் நான்பிறக்கவில்லை. ஆனால் நான் எனது பிறந்தநாளாக 2016-ம் ஆண்டில் நான் முழுவதும் செயல்பாட்டுக்கு வந்த நாளான ‘காதலர் தினத்தை’ கொண்டாடி வருகிறேன். அதன் பிறகு உங்களை சந்தித்ததில் நன்றி, மீண்டும் சந்திப்போம் என்று புன்னகையுடன் கூறி பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. தொடர்ந்து இந்த கண்காட்சியில் பல்வேறு பார்வையாளர்கள் மற்றும் பொது மக்களை சோபியா ‘ரோபோ’ சந்தித்து வருகிறது.






Related News

  • சிங்கப்பூரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
  • இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் – சீனா நம்பிக்கை
  • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
  • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
  • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
  • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
  • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
  • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *