எதிர்க்கட்சிகளுக்கு சோனியா இன்று விருந்து

ekuruvi-aiya8-X3

sonia5எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா இன்று விருந்தளிக்கிறார்.

அடுத்த ஆண்டு பார்லி. லோக்சபாவிற்கு தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக ஆளும் தே.ஜ. கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியுள்ளது. மூன்றாவது அணிக்கான முயற்சிகள் மும்முரம் அடைந்து வரும் நிலையில், காங். மூத்த தலைவர் சோனியா எதிர்க்கட்சி தலைவர்களை விருந்திற்கு அழைத்துள்ளார்.

இதில் 17 கட்சி தலைவர்கள் , பிரதிநிதிகள் பங்றே்க உள்ளதாக கூறப்படுகிறது. நம்பர் 10- டில்லி ஜன்பாத் சாலையில் உள்ள சோனியா வீட்டில் நடக்க உள்ள விருந்தில் பிஜூ ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட சில கட்சிகள் அழைக்கப்படவில்லை. இந்த விருந்தின் போது, 2019- லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது, பா.ஜ.வை வீழ்த்திட கூட்டணி வியூகம் வகுப்பது உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Post

Post Comment