சோமாலியா ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் – 17 பேர் பலி

Thermo-Care-Heating

Somalia-s-al-Shabaab-militants-attack-military-base-outsideசோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது.

உள்நாட்டு ராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது அதிரடியாக தாக்குதல் நடத்திவரும் இந்த தீவிரவாதிகள் மத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் கொன்று குவிக்கின்றனர்.

இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு நகரின் புறநகர் பகுதியான பரிரே என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமின் மீது இன்று அதிகாலை அல் ஷபாப் தீவிரவாதிகள் இரண்டு கார் குண்டுகளால் தாக்குதல் நடத்தினர். பின்னர், மேலும் பல தீவிரவாதிகள் அங்கிருந்த ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டனர்.

ராணுவ வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 17 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

ideal-image

Share This Post

Post Comment