யாழ்ப்பாண மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் உலகவங்கி அதிகாரிகள் சந்திப்பு!

vethanayakanயுத்ததிற்கு பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட முக்கியமாக வடக்கு கிழக்கிற்கு அபிவிருத்தி திட்டங்கள் அரசினால் அதிகமாக முன்வைக்கப்படுகிறது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் உலகவங்கியினருடனான கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் உள்ள சிவில் சமுக அமைப்புக்களின் பிரநிதிகள், முன்னாள் அரச உத்தியோகத்தர்கள், புத்திஜீவிகளுக்கும் உலக வங்கியின் உறுப்பினர்களுக்குமிடையில் வடமாகாணத்திற்கான கலந்துயாடல் ஒன்று இடம்பெற்றது.

சமூக அமைப்புகளுக்கூடாக மக்களின் தேவைகள், அவர்களின் எதிர்பாப்புகளை வெளிப்படுத்த முடியும். ஆகவே சிவில் சமூக பிரநிதிகளுடன் உலக வங்கி கலந்துரையாடலில் ஈடுபட்டது.

தங்களுடைய மக்கள் எவ்விடயங்களில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் அவர்களுக்கான தேவைகள் என்ன என்பது பற்றி சிவில் சமுக பிரதிநிதிகள் விளக்கினார்கள்.

இக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் வடக்கில் உள்ள பிரச்னைகளை அரசிற்கு முன்னிலை படுத்துவதே ஆகும். வருங்காலத்தில் திட்டங்களை முன்வைத்து அபிவிருத்தியை முன்னெடுத்து செல்ல இது உதவியாக அமையும்.

இதனை உலகவங்கியினர் முன்னிலைப்படுத்தி வடக்கில் உள்ள பிரச்சனைகள் பற்றி அரசிடம் முன்வைப்பார்கள். யுத்ததிற்கு பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட முக்கியமாக வடக்கு கிழக்கிற்கு அபிவிருத்தி திட்டங்கள் அரசினால் அதிகமாக முன்வைக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்

Share This Post

Post Comment