சிரியா அரசு படைகள் வெற்றியை நோக்கி பயணிக்கின்றன: அசாத்

ekuruvi-aiya8-X3

asad_interviewகடந்த மாதம் அலெப்போவின் கிழக்கு பகுதியை திரும்ப கைப்பற்றியதன் மூலம் தங்கள் படைகள் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக சிரியா அதிபர் பஷார் அல் அசாத் தெரிவித்துள்ளார்.

ஃபிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த நேர்காணலில், அலெப்போவில் கிளர்ச்சியாளர்களை தோற்கடித்தது, போரின் நெருக்கடியான தருணம் என அவர் விவரித்துள்ளார்.

நகரில் குண்டு தாக்குதல்கள் நடைபெற்றதால் பொது மக்கள் உயிரிழந்துள்ளது குறித்து கேட்டதற்கு, அது மக்களை பயங்கரவாதத்திலிருந்து விடுவிப்பதற்கான விலை என்று தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸிற்கான முக்கிய நீர் விநியோக பள்ளத்தாக்கான வாடி பராடாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகும் சண்டைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Share This Post

Post Comment