சிறைச்சாலை பேருந்துத் தாக்குதல், தமிழ் இளைஞர் ஒருவர் பலி!

ekuruvi-aiya8-X3

kaluththuraiகழுத்துறைப் பிரதேசத்தில் நேற்றைய தினம் சிறைச்சாலை பேருந்து மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரும் பலியாகியுள்ளார்.

குறித்த தாக்குதலில் கழுத்துறைச் சிறைச்சாலையில் பணிபுரிந்து வந்த மட்டக்களப்பு காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தரான 24 வயதுடைய தர்மீகன் சிவானந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் மற்றுமொரு பாதுகாப்பு உத்தியோகத்தரான தர்மரத்ன என்பவரும் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் பாதாள உலகக் கும்பலின் தலைவர் சமயங் உட்பட 7பேர் பலியாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment