இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமிடையில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியேங் லுங் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நேற்றைய தினம் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகள்சார்பாக கைச்சாத் திட்டனர்.

இந்த ஒப்பந்தங்களின் ஊடாக வர்த்தக, நகர அபிவிருத்தி, கலாசார, அரச சேவை உள்ளிட்ட துறைகளில் பாரிய வளர்ச்சிகளை பெற்றுக்கொள்வதற்கு பிரதான காரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது

மெகா பொலிஸ் மாநகர அபிவிருத்தி திட் டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால்

ரூபசிங்க, சிங்கப்பூர் சர்வதேச தொழில்முயற்சி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி டென் சூன் கிம் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

கலாசார ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் சிங்கப்பூருக்கான இலங்கை தூதுவர் நிமல் வீரரத்னவுக்கும் சிங்கப்பூர் கலாசார மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கையின் அரச ஊழியர்களுக்கான விசேட மேம்படுத்தல் திட்டம், தொழிற் பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூன்றில் இலங்கையின் சார்பில் சிங்கப்பூருக்கான இலங்கை தூதுவர் நிமல் வீரரத்ன கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடதக்கது

Sri Lanka's Prime Minister Ranil Wickremesinghe and Singapore's Prime Minister Lee Hsien Loong witness a Memoranda of Understanding signing ceremony between Sri Lanka's Minister of Development Strategies and International Trade Malik Samarawickrama and Singaporean counterpart S Iswaran at the Istana in Singapore July 18, 2016. REUTERS/Edgar Su

Sri Lanka’s Prime Minister Ranil Wickremesinghe and Singapore’s Prime Minister Lee Hsien Loong witness a Memoranda of Understanding signing ceremony between Sri Lanka’s Minister of Development Strategies and International Trade Malik Samarawickrama and Singaporean counterpart S Iswaran at the Istana in Singapore July 18, 2016. REUTERS/Edgar Su


Related News

 • மீண்டும் ஒன்றுகூடும் அரசியலமைப்பு சீர்திருத்த சபை
 • யாழில் படையினர் விவசாயம் செய்து அவற்றை விற்பனை செய்வது இல்லை
 • ஐக்கிய தேசிய கட்சியின் திட்டம் தொடர்பில் எஸ்.பீ திஸாநாயக்கவின் கருத்து
 • தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம்
 • பொலிஸாரின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கின்றது
 • பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கை திரும்பினார்
 • மழையுடன் கூடிய கால நிலை இன்றும் தொடரும்
 • விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது நான் செய்த பாவம் – மாவை சேனாதிராஜா
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *