சிங்கத்தை மோட்டார் பைக்கில் துரத்திச்சென்று கூண்டில் சிக்கிய வாலிபர்கள்

ekuruvi-aiya8-X3

Bikers-caught-on-video-chasing-lions-in-Gir-sanctuaryகுஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில் சிங்கங்களுக்கான சரணாலயம் அமைந்துள்ளது. இந்நிலையில், இங்குள்ள வனப்பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிளில் நான்கு இளைஞர்கள் சிங்கங்களை துரத்திச்செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

பாதுகாக்கப்பட்ட சரணாலயத்தில் வன உயிரியை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்வது குற்றம் என்பதால், இந்த வீடியோ தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணைக்கொண்டு இது தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்திலும் இதே போல, வனப்பகுதியில் சிங்கங்களை காரில் துரத்திச்சென்ற வீடியோ வெளியாகி அதிர்வை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவில் ‘வேகமாக செல்.. வேகமான செல்.. ஷூட் ஷூட்’ வார்த்தைகள் பதிவாகியிருந்தது.

இதனால், சிங்கங்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு வேட்டையாடப்பட்டிருக்கலாம் என்ற கேள்வி எழுந்த நிலையில், காரில் சென்றவர்களை கைது செய்து விசாரணை நடத்திய பின்னர், ‘கேமராவில் படமெடுக்கதான் ஷூட் என கூறினோம்’ என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தொடர்ந்து இது போல சம்பவம் நடைபெற்று வருவது உயிரியல் ஆய்வாளர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Share This Post

Post Comment