யாழ்ப்பாண பல்கலைகழ சிங்கள மாணவர்களுக்கு பிணை

ekuruvi-aiya8-X3

saddamகடந்த ஜூலை மாதம் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைது செய்யப்பட 4 சிங்கள மாணவர்களையும் பிணையில் செல்ல நீதிபதி சதீஷ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த 4 பேருக்கும் தலா 60,000 ரூபா ஆட்பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, யாழ்ப்பாண பல்கலைகழக அனைத்துபீட மாணவர் ஒன்றிய தலைவர் சசிதரனுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கான மருத்துவ அறிக்கை மன்றில் சமர்பிக்கப்பட்டிருக்கவில்லை மேலும் சிங்கள மாணவர்களுக்கு எதிராக முறைகேடு தொடர்பான குற்றப்பத்திரிகையை கோப்பாய் பொலிஸார் தயார் செய்து வைத்திருந்தனர்.இதனால் குறித்த 2 வழக்குகளும் ஒரே பாணியில் அமைவதால் 2குற்றப்பத்திரிகையையும் ஒரே தடவையில் தாக்கல் செய்யுமாறு நீதவான் பணித்தார்.

இதனைத் தொடர்ந்தே 4 சிங்கள மாணவர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கபட்டதோடு வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் பத்தாம் திகதி வரை நீதிபதி ஒத்திவைத்தார்

Share This Post

Post Comment