முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா

ekuruvi-aiya8-X3

Siddaramaiahகர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 104  தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 37 தொகுதிகளிலும் வெற்றிமுகம் காட்டி வருகின்றனர்.

இதனால், தனி மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என கருதப்படுகிறது. எனினும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தர முன்வந்துள்ளது.

இந்நிலையில், முதல் மந்திரி சித்தராமையா இன்று மாலை சுமார் 4 மணியளவில் ராஜ் பவனுக்கு சென்றார். கவர்னர் வஜுபாய் வாலா-வை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஒப்படைத்தார்.

Share This Post

Post Comment