இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு துணை கலெக்டர் பணி!

Facebook Cover V02

PV-Sindhu-appointed-as-Deputy-Collectஇந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு துணை கலெக்டர் பணி நியமனத்துக்கான அரசு ஆணையை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அவருக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் துணை கலெக்டர் பணி வழங்கப்படும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்த நிலையில் பி.வி.சிந்து நேற்று தனது பெற்றோருடன் தலைமை செயலகத்துக்கு சென்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார்.

அப்போது அவருக்கு துணை கலெக்டர் பணி நியமனத்துக்கான அரசு ஆணையை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வழங்கினார்.

அவர் 30 நாட்களில் பணியில் சேருமாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் சிந்து நிருபர்களிடம் பேசுகையில், ‘தற்போது பேட்மிண்டன் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துவேன். உலக போட்டிக்கு தயாராகி வருகிறேன்’ என்று தெரிவித்தார்.

Share This Post

Post Comment