ஒலிம்பிக் வெள்ளி மங்கை பி.வி.சிந்து சீன ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்றார்

ekuruvi-aiya8-X3

PV-Sindhu12சீன ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனாவின் சன் யூ-வை வீழ்த்திய இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து, ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

இதையடுத்து, சீன ஓபன் போட்டியில் பங்கேற்று விளையாடிய சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சீனாவின் ஹி பி்ங்ஜியாவோவை எளிதில் வென்ற சிந்து, நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் கொரிய வீராங்கனை சங் ஜி யுன்-ஐ எதிர்த்து விளையாடினார்.விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிந்து, 11-21, 23-21, 21-19 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

சாம்பியன் பட்டத்துக்காக இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், சீனாவின் சன் யூ-வை எதிர்த்து ஆவேசமாக மோதிய சிந்து 21-11, 17-21, 21-11 என்ற செட்கணக்கில் வெற்றிபெற்று சீன ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று, இந்தியாவுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார்.

Share This Post

Post Comment