சசிகலா கையெழுத்திட தடைவிதிக்க வேண்டும் – சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

finalthemo

supreme_courtசட்டப்பஞ்சாயத்து இயக்க பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் சார்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை நேற்று தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

சொத்து குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளியான வி.கே.சசிகலா கோர்ட்டு தீர்ப்பின்படி தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற முறையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் படிவத்திலும், வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கக்கோரும் படிவத்திலும் அவரோ, அவரால் நியமிக்கப்படும் நபரோ கையெழுத்திடுவது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு முற்றிலும் முரணானது.

அப்படி அவரோ, அவரால் நியமிக்கப்படும் நபரோ அந்த படிவங்களில் கையெழுத்திட்டால் அந்த வேட்பாளர் மனுக்களை நிராகரிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை செய்யப்பட்ட ஒருவர் அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் பொதுச்செயலாளராகவோ, தலைவராகவோ நீடிக்க தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment