ஜெர்மனி பொதுத்தேர்தலில் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் தனது வாக்கை பதிவுசெய்தார்

Facebook Cover V02
Merkel-casts-ballot-in-German-electionஜெர்மனியின் நாடாளுமன்றம் கடந்த 1949ம் ஆண்டு நிறுவப்பட்டது. மொத்தம் 598 உறுப்பினர்கள் கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 300 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதற்கு முன்னர் நடைபெற்ற அனைத்து
தேர்தலிகளிலும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியும், சமூக ஜனநாயக கட்சியும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 311 இடங்களில் வெற்றி பெற்று சமூக ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து மூன்றாவது முறை சான்சலராக (அரசுத் தலைவர்) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த அரசின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த சான்சலரைத் தேர்ந்தெடுப்பதற்கான 19-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. இத்தேர்தலில் சான்சலர் வேட்பாளராக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் தற்போதைய சான்சலரான ஏஞ்சலா மெர்கலும், சமூக ஜனநாயக கட்சி சார்பில் மார்டின் ஷூல்ஸ்சும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர இன்னும் ஐந்து பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
சமூக ஜனநாயக கட்சிக்கு சில இடங்களில் ஆதரவு குறைந்துள்ளதால், இந்த தேர்தலிலும் ஏஞ்சலா மெர்கெல் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் வெற்றி பெற்று ஏஞ்சலா மெர்கல் நான்காவது முறையாக சான்சலர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பெர்லின் நகரில் உள்ள வாக்குச்சாடியில் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் கணவர் ஜோவாசிம் சாவருடன் வந்து தனது வாக்கை பதிவுசெய்தார். முன்னதாக அந்நாட்டு குடியரசுத்தலைவர் பிராங்-வால்டர் ஸ்டெயின்மேயர் தனது வாக்கை பதிவுசெய்தார்.

Share This Post

Post Comment