பாலியல் தொடர்பான நோய்கள் வேகமாகப் பரவுகிறதாம் டொரோண்டோ சுற்றுவட்டாரப் பகுதிகளில் !!

டொரோண்டோ சுற்று வட்டாரப் பகுதிகளை அதிகம் ஆக்கிரமித்துள்ள நோய்கள் எவை, இவை பரவக் கூடியதா என்பது உள்ளிட்ட பொதுவான சுகாதார காரணிகளை மையமாகக் கொண்டு சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கடந்த 2 ஆண்டுகளில் பிற நோய்களைக் காட்டிலும் பாலியல் தொடர்பான நோய்களே டொரோண்டோ சுற்று வட்டாரப் பகுதிகளை அதிகம் ஆக்கிரமித்துள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

2014 இல் மட்டும் chlamydia எனப்படும் பாலியல் நச்சுக்கிருமி சம்பந்தமான நோய் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட டொராண்டோ வாசிகளிடேயே புதிதாய் பரவியிருப்பதை சுகாதார புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டின. எந்த அறிகுறிகளும் இல்லாத இந்த நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவக் கூடிய தன்மை கொண்டது.

இதே போன்றே டொரோண்டோ சுற்றுப்புறங்களில் பலரிடம் மேகவட்டை எனப்படும் பாலியல் நோயும் அதிகம் காணப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவற்றுள் chlamydia எனப்படும் பாலியல் நச்சுக்கிருமி சார்ந்த நோய் பெரும்பாலும் ஓரினச் சேர்க்கையாள ஆண்களிடையே அதிகம் காணப்பட்டதாகவும் இந்நோயை குணப்படுத்த ஆன்டிபயாடிக் மருந்துகளே போதுமானவை என்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் மேகவட்டை எனப்படும் பாலியல் நோய் வந்து விட்டால் அதை குணப்படுத்த முடியாது. டொரோண்டோ சுற்றுப் புறங்களில் உள்ள 140 பகுதிகளில் இது போன்ற எச்.ஐ.வி உள்ளிட்ட பாலியல் நோய்க்கும் பலர் ஆளாகியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் நீங்கள் வசிக்கும் சுற்றுப்புறப் பகுதிகளில் இந்நோய்கள் எத்தனை பேருக்கு உள்ளது. அந்தப் பகுதியின் மொத்த மக்கள்தொகை என்ன என்பதை துல்லியமாக காட்டும் கூகிள் வரைபடமும் வெளியாகியுள்ளது. இந்த வரைபடங்கள் 2014 ஆம் ஆண்டு புள்ளி விபரங்களை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவை ஆகும்

Share This Post

Post Comment