ஏமனில் ஹவுதி படைகள் ஏவுகணை தாக்குதல் – 5 பேர் பலி

ekuruvi-aiya8-X3

Yemen22ஏமன் நாட்டில் ஹவுதி இயக்கம் அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.  ஈரான் ஆதரவுடன் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், ஏமனின் மேரிப் நகரில் இந்த இயக்கம் கத்யூஷா ரக ஏவுகணைகளை கொண்டு பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதுபற்றி சவூதி அரேபியாவுக்கு சொந்தமுடைய அல் அரேபியா ஊடகம் இன்று வெளியிட்டு உள்ள தகவலில், மேரிப் நகரில் குடியிருப்புவாசிகளை இலக்காக கொண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் பொதுமக்களில் 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் 20 பேர் காயமடைந்து உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

Share This Post

Post Comment