மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்பட மேலாடையின்றி செரீனா வில்லியம்ஸ் பாடல்

அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கருதப்படுகிறது. இதனையொட்டி அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியமஸ், மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பாடலை பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“ஐ டச் மைசெல்ப்” பாடலை பாடி பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.
Serena-Williams-Singing“ஐ டச் மைசெல்ப்” பாடலை எழுதியது ஆஸ்திரேலியாவின் டிவின்ல்ஸ். அவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மார்கப்புற்றுநோயால் 53 வயதில் இறந்துவிட்டார். இப்போது இந்த பாடலைதான் செரீனா தனது இரு கரங்களையும் தனது மார்பில் பதித்து பாடியுள்ளார். “பெண்கள் தங்கள் மார்பகங்களை கையால் அவ்வப்போது சோதனை செய்து சோதனை செய்தாலே ஏராளமானவர்களின் உயிரை காக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ள செரீனா வில்லியமஸ், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி செய்தேன். வரும்முன் காப்பதே நல்லது என வீடியோவை பதிவிட்டுள்ளார்.
செரீனாவின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகிறார்கள், அவர்களுடைய ரசிகர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து செய்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோவை செரீனா வில்லியம்ஸ் பதிவிட்ட 10 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.





Related News

  • சிங்கப்பூரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
  • இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் – சீனா நம்பிக்கை
  • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
  • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
  • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
  • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
  • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
  • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *