இன்று தந்தை செல்வாவின் நினைவு தினம்

ekuruvi-aiya8-X3

selvanayaham-jaffnaதந்தை செல்வநாயகத்தின் 40வது நினைவு தினம் யாழ். பிரதான வீதியில் யாழ். பொதுநூலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்றைய தினம் நினைவுகூரப்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 மணியளவில் தந்தை செல்வா சதுக்கத்தில் கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் தந்தை செல்வநாயகத்தின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன், தந்தை செல்வநாயகத்தின் நினைவிடத்தில் மலர் அஞ்சலியை செலுத்தினர்.

தொடர்ந்து தந்தை செல்வநாயகத்தின் நினைவு பேருரை நிகழ்வும் நடத்தப்பட்டது. இந்நினைவு பேருரை தந்தை செல்வா அறங்காவல் குழுவின் தலைவர் சு.ஜெபநேசன் தலமையில் நடைபெற்றுது.

இந்நிகழ்வில் தந்தை செல்வா நினைவு பேருரையை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஐயம்பதி விக்கிரமரட்ண நிகழ்த்தினார்.

தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் அதன் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறு ப்பினருமான வி. ஆனந்த சங்கரியும் அஞ்சலி செலுத்தினார்.

இந்த நினைவுநாள் நிகழ்வில், தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் சித்தார்த்தன், சரவணபவன், உட்பட கிழக்கு மாகாண அமைச்சர் துரைரட்ணம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

selvanayaham-jaffna1 selvanayaham-jaffna2 selvanayaham-jaffna3

Share This Post

Post Comment