தந்தை செல்வாவின் 39ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு

ekuruvi-aiya8-X3

தந்தை செல்வாவின் 39ஆவது நினைவு நாளான இன்றுகாலை 9.00மணிக்கு, யாழ்ப்பாணம், தந்தை செல்வா சதுக்கத்திலுள்ள நினைவிடத்தில் அஞ்சலியும் நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.

தந்தை செல்வா அறங்காவலர் குழுத் தலைவர் பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்களது தலைமையில் இந் நினைவுதின நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் தந்தை செல்வாவின் புத்திரர் சந்திரகாஸன், ரொறன்ரோ பல்கலைக் கழகப் பேராசிரியர் வணபிதா கலாநிதி ஏ.ஜே.சந்திரகாந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தந்தை செல்வா அறங்காவற் குழு உறுப்பினர் வி.ஜி.தங்கவேல், இந்தியத் துணைத் தூதுவர் அ.நடராஜன், மௌலவி எம்.ஐ .மஹ்மூத் (பலாஜி), அருட்தந்தை இமானுவல் செபமாலை அடிகள், நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வடமாகாண சபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், இ.ஆர்னோல்ட், எஸ்.சிவயோகன், தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் அமைப்பாளர் க.அருந்தவபாலன், வலி தெற்குப் பிரதேச சபையின் முன்னாள் பிரதேச தவிசாளர் தி.பிரகாஷ், வலி. வடக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன், வலி. மேற்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சனி ஐங்கரன், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் திருமதி. கோமதி ரவிதாஸ், வலி.வடக்குப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் லயன் சி.ஹரிகரன் தந்தை செல்வா அறங்காவற் குழுவின் செயலாளர் பேராசிரியர் ச.சத்தியசீலன் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

5 index index6 index44 index45

Share This Post

Post Comment