செல்லப்பிராணிகளான பூனை மற்றும் நாய்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை – சீனாவில் அமோக வரவேற்பு

Facebook Cover V02

Chinese-pet-owners-turn-to-acupuncture-to-treat-catsசீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள விலங்குகள் சுகாதார மையம் ஒன்றில் செல்லப்பிராணிகளுக்கு அக்கு பஞ்சர் சிகிச்சை மூலம் பல நோய்கள் குணப்படுத்தப்படுகிறது.

சீனாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான அக்குபஞ்சர் முறை மூலம் நீளமான ஊசி உடலின் வலி உள்ள பகுதியில் குத்தப்படும். அதன் மூலம் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு உடலில் ஏற்பட்ட வலி குணமாக்கப்படும். இது போன்று செல்லப்பிராணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

தற்சமயம் அதிகப்படியான மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை அக்குபஞ்சர் சிகிச்சைக்கு அழைத்து செல்கின்றனர். இதன் மூலம் பிராணிகளின் உடலில் ஏற்படும் கட்டிகள் அறுவை சிகிச்சை ஏதும் இல்லாமல் குணப்படுத்தப்படுகின்றன.

விலங்குகள் சுகாதார மையத்தில் அக்குபஞ்சர் சிகிச்சையில் பிரபலமான மருத்துவர் ஜின் ரிஷன் கூறுகையில், ‘இந்த சிகிச்சை தொடங்கிய நான்கு வருடத்தில் 2 ஆயிரம் பூனை மற்றும் நாய்கள் வந்துள்ளன. மேலும் நடக்க முடியாத நாய்கள் கூட இந்த சிகிச்சையின் மூலம் நடக்க வைக்கப்படுகின்றன’ என்றார்.

chinaa._L_styvpf

Share This Post

Post Comment