செட்டிகுளத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ பயிற்சி முகாம் அகற்றப்பட்டுள்ளது!

ekuruvi-aiya8-X3

armyவவுனியா மாவட்டம் செட்டிகுளப் பிரதேசத்திற்குச் சொந்தமான மாணிக்கப் பண்ணை குடியிருப்புப் பகுதிகளுக்குள் இருந்த 25 ஆவது படைப்பிரிவின் ஆயுதப் பயிற்சி முகாம் அகற்றப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த பயிற்சிமுகாமுக்கு வருகைதந்த இராணுவ கனரக வாகனங்கள் பயிற்சிக்காக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட இராணுவத்தினரின் பொருட்கள் முழுவதையும் ஏற்றிச் சென்றதாக அப்பிரதேசத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.

செட்டிகுளம் மாணிக்கப்பண்ணைப் பிரதேசத்தில் இராணுவத்தினர் பயிற்சியிலீடுபடுவதால் அப்பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் மக்கள் தெரிவித்ததையடுத்து, சில நாட்களுக்குமுன்னர் குறித்த பிரச்சனை தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே, குறித்த 25 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினரின் ஆயுதப் பயிற்சி முகாம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அகற்றப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment