அகமதாபாத் ரெயில்வே நிலையத்தில் மர்ம பொருள் கிடந்ததால் பரபரப்பு

ahm_rlyகுஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9, 14-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அலகாபாத் ரெயில்வே நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான மர்ம பொருள் கிடந்துள்ளது. இது குறித்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து ரெயில் நிலையத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மர்ம பொருள் கிடந்ததால் பாதுகாப்பு கருதி பயணிகள்வெளியேற்றப்பட்டனர். இதனால் அலகாபாத் ரெயில் நிலையத்தில் பரபரப்பு காணாப்பட்டது.  பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி 29-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment