ராஞ்சியில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

ekuruvi-aiya8-X3
Ranchi_19ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்று இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.  தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி நேற்றைய போட்டியில் மிக மோசமாக விளையாடி தோல்வி கண்டது இந்திய ரசிகர்களை பெருத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்திய அணி தோல்வி அடைந்த ஏமாற்றத்தை தாங்க முடியாத ரசிகர்கள் சிலர், போராட்டத்தில் ஈடுபட்டனர். கோலி, யுவராஜ், அஸ்வின் உள்பட இந்திய வீரர்களின் உருவப்படங்களை தீயில் எரித்தனர்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஞ்சியில் உள்ள இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனியின் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தோனியில் இல்லத்திற்கு  எப்போதும் பாதுகாப்பு அளித்து வரும் உள்ளூர் போலீசாருடன் இணைந்து கூடுதல் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
முன்னதாக கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறியது. இதனால், அப்போது தோனியின் இல்லம் ரசிகர்களால் தாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

Share This Post

Post Comment