ஸ்கார்பரோ பாடசாலை மாணவர்களின் ஆய்வுக் கண்காட்சி!
Apr 27 2012 06:48:18

ஸ்கார்பரோ பாடசாலை மாணவர்களின் ஆய்வுக் கண்காட்சி ஒன்று நேற்று வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை ஸ்காபுறோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் நடைபெற்றது. வரவேற்பு மண்டபத்தில் மேசைகள் அடுக்கப்பட்டு அவற்றின் மீது கனடா தேசியக் கொடியின் வரலாறு, சிபிசி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வரலாறு, நாட்டு நலனில் பெண்களின் பங்கு, ஆப்கானிஸ்த்தான் யுத்தத்தில் கனடாவின் பங்களிப்பு போன்ற பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் படங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. Heritage Fair என்ற நிறுவனத்தினால் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போட்டோக்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆய்வுக் கட்டுரைகளை பெருந்தொகையான மக்கள் பார்வையிட்டனர். அவற்றைத் தயாரித்த மாணவ, மாணவிகள் அங்கு நின்று தமது ஆய்வு பற்றிய பார் வையாளர்களின் வினாக்களுக்கு விடையளித்து விளக்கிக் கொண்டிருந்தனர். அந்தந்த பாடசாலை மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட ஆய்வுகளில் சிறப்பான சில கட்டுரைகள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு அந்தந்த பாடசாலைகளின் சார்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஸ்காபுறோ மார்கோஸ் வுளுவாட் வீதியிலுள்ள சாள்ஸ் கோடன் பாடசாலையின் ஏழாம் வகுப்பு மாணவிகளான ஸ்ரீலங்காவைச் சேர்ந்த வர்சா வாசுதேவா, பாகிஸ்த்தானைச் சேர்ந்த மஜீதா கான் ஆகியோர் நாட்டு நலனில் பெண்களின் பங்குபற்றிய ஆய்வுக் கட்டுரையினை காட்சிக்கு வைத்திருந்தனர். முதன் முதலாக நாசா விண்கலத்தில் 1992 ம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற கனடா பெண்மணி Roberta Bondar, பெண்களின் சமஉரிமைக்காக முப்பது வருட காலம் போராடிய Doris Anderson (1921 – 2007), கனடா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து கனடா சட்ட திட்டங்களில் முக்கிய பங்களிப்பினைச் செய்தவரும், ஐ.நா.வில் மனித உரிமைக்கான உயர் ஸ்தானிகராகப் பணியாற்றியவருமான Louise Arbour போன்ற பல முக்கிய பெண்மணிகளளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையினை காட்சிக்கு வைத்திருந்தனர். இவர் ஐ.நா.வில் பணியாற்றிய போது 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் மனித உரிமை விவகாரம் சம்பந்தமாக ஸ்ரீலங்காவுக்கும் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இத்தலைப்பிலான ஆய்வினை மேற்கொண்டீர்கள் என அவர்களிடம் கேட்ட போது ஆண்களே அதிகமாக சகல விடயங்களிலும் முன்னணி வகிக்கின்றனர். ஏன் பெண்களும் அவ்வாறு முன்னணி வகிக்கக் கூடாது என யோசித்தே அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இவ்விடயத்தில் நாம் ஆய்வு செய் தோம் என வர்சா வாசுதேவா கூறினார்.

இக்கண்காட்சியினை நடுவர்களும் வந்து பார்வையிட்டு அவற்றை தயாரித்தோரிடம் கேள்விகள் கேட்டு அவற்றுக்கான புள்ளிகளை வழங்கினார்கள். இவற்றுள் சிறந்தவையாக தெரிவு செய்யப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் கண்காட்சி பின்னர் மாகாணப் போட்டிகளில் பங்குபற்ற சந்தர்ப்பம் வழங்கப்படும் எனத் தெரிய வந்தது.

 
May 24 2013 08:15:54 [Canada]

Read More >

May 24 2013 07:34:38 [Canada]
மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் இயற்கையாக வளரும் ஒருவகை பூஞ்சையினமான இதைச் சிலர் பிடுங்கி எறிவதுண்டு. ஆனால் பல நாட்டவரால் விரும்பி

Read More >

May 24 2013 07:30:44 [Canada]
கனடிய விசாக்கள் குறித்து விரிவான விளக்கமளிக்கும் வகையிலும் அதில் ஸ்காபுறோ மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் மக்களின் புகார்களை அரசிடம் கொண்டு

Read More >

May 24 2013 02:31:54 [Canada]
இருதய மற்றும் பாரிசவாத நோய் சம்பந்தமான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாகவும், இந் நோய்களினால் எற்றபடும் உயிர் இழப்புக்களை தடுக்கும் ஆராய்ச்சிகளை

Read More >

May 24 2013 02:21:21 [Canada]
லண்டன் மாநகரில் மக்கள் நெரிசல் மிகுந்த சாலையில் பட்டப்பகலில் ராணுவ வீரர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் மாநகரின் உல்விச் பகுதியில் நேற்று பிற்பகல் 2.20 மணியளவில்

Read More >

May 24 2013 02:20:13 [Canada]
நேற்று காலை வேளையில் காலேஜ் சுரங்கத தொடரூந்து நிலையத்தில் சில மணி நேரங்கள் பெரும் பரபரப்பு நிலவியது. பெண்மணியொருவர் திடிரென தொடரூந்து நிலையத்தின் தண்டவாளத்தில் குதித்து

Read More >

May 24 2013 02:18:44 [Canada]
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரொறொன்ரோ மாநகர முதல்வர் றொப் போர்ட் கொக்கெய்ன் பிடித்த காணொளியை எப்பாடுபட்டாவது $200,000 கொடுத்து வாங்கி ஒளிபரப்புவோம் என இரு தினங்களுக்கு முன்னர்

Read More >

May 24 2013 02:03:40 [Canada]
பொதுவானதொரு அமைப்பு மட்டுமல்ல , பொது வாழக்கைக்கு வந்து விட்டவர்கள் எந்தத் தவறு செய்தாலும் நேர்மையான ஊடகங்கள் அதனை மக்களுக்கு சுட்டிக் காட்டத்தான் செய்யும். அது ஊடகங்களின் பொறுப்பு

Read More >

May 23 2013 02:22:49 [Canada]
ரொறொன்ரோவின் நிலத்தடி வாகன நிறுத்துமிடம் ஒன்றில் 22 வயதாகும் இளம்பெண் ஒருவர் மூவர் அடங்கிய கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

Read More >

May 23 2013 02:00:14 [Canada]
சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து மாநகர முதல்வர் கொக்கைன் பிடிப்பது போன்ற காணொளிகள் வெளியான சில நாட்களுக்குப் பின்னர், இந்த விடயத்தில் பதில் சொல்ல றொப் போர்ட் நேரடியாக

Read More >