சாவகச்சேரியில் தும்புசார் உற்பத்தித் தொழிற்சாலை திறப்பு!

Facebook Cover V02

FB_IMG_1491458345401வடமாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தினால் சாவகச்சேரி கோயிற்குடியிருப்பு பிரிவில் அமைத்துள்ள தும்புசார் உற்பத்தி நிலையம் நேற்று மாலை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திணைக்களப் பணிப்பாளர் திருமதி உஷா சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் செல்வின், தென்மராட்சி பிரதேச செயலர் திருமதி தேவந்தினி பாபு, உதவிப் பிரதேச செயலர் செல்வி ரஞ்சனா நவரத்தினம் உட்பட திணைக்கள அதிகாரிகளும் பிரதேச செயலக அலுவலர்களும் மக்களும் கலந்துகொண்டனர்.

விருந்தினர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு முதலமைச்சர் நிலைய கட்டடத்தினை திறந்து வைத்ததுடன் தொழிற்கூடத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

FB_IMG_1491458352320 FB_IMG_1491458343010 FB_IMG_1491458340521

 

Share This Post

Post Comment