சசிகலா முதல்வராக எதிர்ப்பு; பிரதமருக்கு கடிதம் எழுதிய சசிகலா புஷ்பா

sdsd

sasikala_pushpaதமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அ.தி.மு.க.,வின் சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா, தமிழக முதல்வராக வரும் 7 அல்லது 9ம் தேதி பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சசிகலா புஷ்பா, பிரதமர் மோடி மற்றும் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ்வுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

அ.தி.மு.க., பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, அ.தி.மு.க.,வின் சட்டசபை குழு தலைவராகவும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது. அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. அவர் அடிப்படையில் எந்த கட்சி பணியும் செய்தது கிடையாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறை சென்ற போதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், தற்காலிக முதல்வராக அவர் நியமிக்கப்பட்டதில்லை.

சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்றால், தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பிரதமர், கவர்னர் தலையிட்டு சசிகலா முதல்வர் பதவியில் அமர்வதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சசிகலா அ.தி.மு.க., பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என தேர்தல் ஆணையத்திடம் சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment