சிறையில் சசிகலாவுக்கு நட்சத்திர ஓட்டல் வசதி

ekuruvi-aiya8-X3

sasikala452பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு நட்சத்திர ஓட்டல் போல் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைககள் வழங்கப்பட்டு வருவதாக டி.ஜ.ஜி., ரூபா பரபரப்பு தகவலை வெளியே கொண்டு வந்தார். இது தொடர்பாக அதிகாரிகள் மாற்றம், விசாரணை என சசி சிறை விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

இந்நிலையில் சசிக்கு சிறையில் என்ன, என்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்படி அவருக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் 5 அறைகள் இருந்தன.

சமையல் அறை, படுக்கை அறை, தனி குளியல் அறை, யோகா செய்ய தனி அறை, யோகா மேட், மற்றும் சமையல் தளவாடச்சாமான்கள் இருந்துள்ளன. யாரும் உள்ள நுழைய முடியாத அளவிற்கு தடுப்பு சுவர் வைக்கப்பட்டிருந்தது. சசியை சந்திக்க வரும் இடத்தில் கேமரா கிடையாது.

இவ்வாறு சசி ஒரு நட்சத்திர ஓட்டல் அறையில் வாழ்ந்து போல் தங்கியுள்ளார். எதையும் பணம் இருந்தால் வாங்கி விடலாமோ?

Share This Post

Post Comment