அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செல்லுமா?: திங்கட்கிழமை தேர்தல் கமி‌ஷன் தீர்ப்பு

sdsd

sasikala528ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து ஆளும் அ.தி.மு.க. சசிகலா தலைமையிலும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் இரு அணிகளாக பிளவுப்பட்டுள்ளது.

இரு அணியினரும் அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்ற தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இரு தரப்பினரும் தலைமை தேர்தல் கமி‌ஷனை நாடியுள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓ.பி.எஸ். தரப்பில் முதலில் தேர்தல் கமி‌ஷனில் மனு கொடுக்கப்பட்டது. அதற்கு சசிகலா தரப்பில் கடந்த வாரம் விளக்கம் அளித்து பதில் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை ஓ.பி.எஸ். அணியினர் தலைமை தேர்தல் கமி‌ஷனில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சசிகலா பொதுச்செயலாளராக தேர்வானது விதிமீறல்கள் உள்ளதாக சுட்டி காட்டினார்கள்.

மேலும் இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கே ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று சசிகலா தரப்பினர் தலைமை தேர்தல் கமி‌ஷன் அலுவலகத்துக்கு சென்று தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். அ.தி.மு.க. பிளவுபடவில்லை. எனவே ஓ.பி.எஸ். அணியினர் கூறியுள்ள கோரிக்கைகளை ஏற்க கூடாது என்றனர்.

மேலும் சசிகலா தற்காலிகமாகத்தான் பொதுச்செயலாளராக இருப்பதாகவும், விரைவில் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தப்படும் என்றும் சசிகலா தரப்பினர் வலியுறுத்தினார்கள்.

Share This Post

Post Comment