சர்வமத குழுக்களின் ஏற்பாட்டால் காணாமல்போனவர்களின் விபரங்களைத் திரட்டும் நிகழ்வு யாழில்!

ekuruvi-aiya8-X3

IMG_0346சர்வமதக் குழுக்களின் ஏற்பாட்டில் நாட்டில் கடந்த கால யுத்த நிலைமைகளின் போது காணாமற் போனவர்களின் விபரங்களை கேட்டு அறியும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம் ஆகிய மாவட்டங்களின் சர்வமதக் குழுக்களின் ஏற்பாட்டில் இலங்கை சமாதானப் பேரவையின் அனுசரணையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் காலை 9.00 மணியளவில் ஓய்வு பெற்ற யாழ்ப்பாண உயர் நீதிமன்ற நீதிபதி இ.வசந்தசேனன் தலைமையில் நடைபெற்றது.

யுத்தம் காரணமாக நேரடியாக அல்லது மறைமுகமாக கடுமையாக பாதிக்கப்பட்டோர் மத்தியிலிருந்து, தெரிவு செய்யப்பட்ட சிலரின் இன்னல்களை நேரடியாக கேட்டறியும் நிகழ்வாகவே குறித்த நிகழ்வு அமைந்திருந்தது.

அந்த வகையில் யாழ்பாணத்தைச் சேர்ந்த ஜே.நர்மிலா, செ.பரமசாமி, யுத்த கால நிலைமைகளின் போது “வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் அவையில் சாட்சியம் அளித்தனர், மேலும் மன்னார், புத்தளம் பகுதியைச் சேர்ந்த வ.ஆகத்தம்மாள்,செ.அருள்ராணி, எம்.யாவாஹிர், க.குகசிறி,ஏ.நாகூர்பிச்சை போன்றவர்கள் உயிலம் குளம் சோதனைச் சாவடியில் வைத்து கடத்தப்பட்டதாக அவர்களின் உறவுகள் சாட்சியம் அளித்தனர்.

உறவுகள் கடத்தப்பட்டு கவலையுடன் வாழும் குறித்த குடும்பங்கள் தற்பொழுது மிகவும் இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்றன. ஆட்பிணை மனுமூலம் காணாமல் போனவர்களுக்கான சலுகைகள் அரசினால் தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றன, ஆனால் கடத்தப்பட்ட தமது உறவுகள் தற்பொழுது உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்னும் சந்தேகத்தினால் குறித்த ஆட்பிணை மனுவினை சமர்ப்பிக்க முடியாத காரணத்தினால், அரசினால் வழங்கப்படும் உதவிகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சில நபர்கள் தற்பொழுது வீட்டினை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.கொடிகாமம் வடக்கினை சேர்ந்த மைக்கல் கொலின்ஸ் எனும் நபரின் கணவன் 2007ஆம் ஆண்டு யுத்தத்தின் போது இராணுவத்தால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார், எனினும் சித்திரவதை காரணமாக ஒரு கால், கண் என்பன செயற்படாத காரணத்தினால் தனது குடும்பம் வறுமையில் வாடுவதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இவ்வாறு பல வகையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்திருந்த போதிலும் எவ்வித பலனும் தமக்கு கிடைக்கவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.

யுத்தம் நிறைவடைந்த பொழுது ஐ.நா சபையின் ஆலோசனையின் கீழ், அமைச்சர் மங்கள சமரவீர காணாமல் போனோர் தொட ர்பாக மூன்று செயற்பாடுகளை நடைமுறைபடுத்தினார். காணாமல் போனவர்களின் உண்மை விபரங்களை தொகுத்தல், அவர்களுக்கான இழப்பீட்டினை வழங்கல், காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம் ஒன்றினை நிர்மாணித்தல்.

மேற்குறிப்பிட்ட நடைமுறைகள் தற்பொழுது நடைமுறையில் உள்ள போதிலும் எவ்வித பயனும் தமக்கு கிடைக்கவில்லை என குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உறவுகள் தெரிவித்திருந்தனர்.

 மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த நிகழ்வின் வளவாளர்கள், பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வதாகவும், இது பற்றி தங்களது அமைப்பின் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என நம்பிக்கை தெரிவித்தனர்.

 வளவாளர்களாக ஓய்வு பெற்ற யாழ்ப்பாண உயர் நீதிமன்ற நீதிபதி இ.வசந்தசேனன், யாழ்ப்பாணம் சர்வ மத தலைவர் ஜெயக்குமார், சமாதான செயற்திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்தின, யாழ் பல்கலைக் கழக சிரேஷ்ட அரசியற் துறை விரிவுரையாளர் கே.ரி.கணேசலிங்கம், யாழ் பல்கலைக் கழக சிரேஷ்ட சமூக விஞ்ஞான விரிவுரையாளர் ஜி.தில்லை நாதன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் நந்தனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

IMG_0344 IMG_0343 IMG_0345

Share This Post

Post Comment