மைத்திரியரா? மகிந்தரா? யார் முன்னுக்கு? யார் பின்னுக்கு ? சுவாரஸ்யமான சாத்திரம்

ekuruvi-aiya8-X3

mahinad-1-e1462148602742மே தினம் இனிதே நிறைவுக்கு வந்திற்று. அதாவது மைத்திரியும், மகிந்தவும் பலத்த காட்டுறதுக்காக காலியிலும், கிருலப்பனையிலயும் கூடின கூட்டம் முடிவுக்கு வந்திற்று. இந்தப் போட்டிய நேரில பாக்க முடியாத நாங்கள், அவையளின்ர பேஸ்புக் மற்றது டுவீற்றர் பக்கங்கள பார்க்க வேண்டியிருந்தது.

அவையின்ர பலத்த நீங்களும் பார்க்கலாம். முதலில ரெண்டு பேரின்ரயும் டுவீற்றர் பக்கத்த எடுத்துக்கொள்ளுவம். இண்டைய இலங்கை அரசியலுக்கு ரெண்டு பேரின்ர டுவீற்றர் – பேஸ்புக் பக்கங்களும் முக்கியமான விசயங்கள சொல்லுது. மற்றப் பக்கத்தால சிங்கள மக்கள் மத்தியில யார் பலமா இருக்கினம் எண்டதையும் சொல்லுது.

முதலில் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்ர டுவீற்றர் பக்கத்தை எடுத்துக் கொள்ளுவம்.

mai-1-1024x523

ரெண்டு பேரும் பொது மேடையில போட்டிபோட்ட மே தினம் தொடங்கி, இன்றைய நாள் முடியிற நேரமான பின்னேரம் 6 மணி வரைக்கும் அவரின்ர டுவீற்றர் பக்கத்தில மே தினம் பற்றி எந்தப் பதிவும் (Tweet) இல்ல.

ஆனா மகிந்தரின்ர டுவீற்றர பாத்திங்களெண்டால், மே தின கொண்டாட்டங்கள் ஆரம்பிச்ச நேரம் தொடக்கம், இந்த பத்திய எழுதுற நேரத்துக்கு (மாலை 6.19 மணி) 25 நிமிடத்துக்கு முன்னுக்கு வரை கிருலப்பனை நிகழ்ச்சி பற்றிய 3 செய்தி பதிவேறியிருக்கு.

இந்நாள் ஜனாதிபதியின்ர டுவீற்றரில இதுவரைக்கு 1056 பதிவுகள் போட்டிருக்கிறார்.

அதேநேரத்தில, மகிந்தரின்ர டுவீற்றரில் 4373 பதிவுகள போட்டிருக்கிறார். . அதிலயும் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின்ர பதிவுக்கு டுவீற்றரில கிடைக்கிற மீள்பதிவுகளிலும் (Retweet) பார்க்க மகிந்தரின்ர பதிவுகளுக்கு கிடைக்கிற மீள்பதிவுகள் கிட்டத்தட்ட ரெண்டு மடங்குகள் அதிகம்.

டுவீற்றரில ஒரு தத்துவம் இருக்கு. எங்க பின்தொடருற ஆக்களின்ர (Followers) எண்ணிக்கை தான் எங்கட பலத்தைக் காட்டும். அதிலயும் உண்மையிருக்குத்தானே. அதிலும் மகிந்தர்தான் முன்னிலையில இருக்கிறார். இந்நாள் ஜனாதிபதிய 63 500 பேர் பின்தொடர, முன்னாள் ஜனாதிபதிய 2 லட்சத்தி 100 பேர் பேர் பின்தொடருகினம்.

இவையள் பின்தொடருற ஆக்கள் எண்டதில மைத்திரிபால தான் முன்னிலையில இருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன், ஜோன் ஹெரி, நரேந்திர மோடி, நிஷா பிஸ்வால் போன்ற உலகப் பிரபலங்கள் 27 ஆக்கள பின்தொடருறார். ஆனா மகிந்தர் தன்ர மகன் நாமல் ராஜபக்ச, மற்றது, இலங்கைய பற்றி சில உலக அமைப்புக்கள் உள்ளடங்க 10 டுவீற்றர் கணக்குகளத்தான் பின்தொடருறார். எந்த ஒரு வெளிநாட்டுக்காரரையும் மகிந்தர் பின்தொடரேல்ல.

டுவீற்றர் பதிவுகளில விழுந்த விருப்பங்களின்ர (Like) எண்ணிக்கையில மைத்திரியர்தான் முன்னுக்கு நிக்கிறார். 5 விருப்பங்கள் விழுந்திருக்கு . அதுவும் அவரின்ர பதிவுகளுக்கு உலகத் தலைவர்கள்தான் விருப்பம் போட்டிருக்கினம். இதில மகிந்தர சறுக்கிற்றார். வெறும் ஒரே ஒரு விருப்பம்தான் ஆளுக்கு. மகிந்தர் பதவியிழந்த கவலையோட, மனுசிக்கு பக்கத்தில இருக்கிற போட்டோ ஒண்டு போட்டிருக்கிறார். அதுக்கு அவரின்ன சின்னப்பொடி யோசித ராஜபக்ச விருப்பம் போட்டிருக்கிறார். அதுமட்டும்தான் அந்தாளுக்கு விழுந்த விருப்பம்.

2222

இனி ரெண்டு பேரின்ர பேஸ்புக் பக்கங்களையும் ஒருக்கா பாப்பம். அதுவும் மே தினமான இண்டைய நாள எடுத்துக்கொள்ளுவம். ரெண்டு பேரும் மே தினம் பற்றி போடுற பதிவ, 40 நிமிசத்துக்குள்ள எத்தின பேர் விரும்புகினம், எத்தினபேர் தங்கட பேஸ்புக்கில பகிர்ந்து கொள்ளுகினம் எண்டு பாப்பம்.

மகிந்தர் கிருலப்பன மேதினம் பற்றி தன்ர பேஸ்புக் பக்கத்தில பதிவு போட்டு, 13 நிமிசத்துக்குப் பிறகு மைத்திரியர் தன்ர பேஸ்புக் பக்கத்தில காலி மேதினம் பற்றி பதிவு போட்டார்.

மகிந்தர் பதிவு போட்டு 40 நிமிசத்துக்குள்ள 12 ஆயிரம் பேர் அதுக்கு விருப்பம் போட்டுச்சினம். 21 ஆயிரம் பேர் 2100 பேர் தங்கட பேஸ்புக்கில பகிர்ந்து கொண்டுச்சினம்.

மைத்திரியர் பதிவு போட்டு 49 நிமிசத்துக்குள்ள 843 பேர் அதுக்கு விருப்பம் போட்டுச்சினம். 69 பேர் தங்கட பேஸ்புக்கில பகிர்ந்து கொண்டுச்சினம்.

maa

அரசியலில பலம் எண்டுறது மக்களை திரட்டுவதில மட்டுமில்ல அந்தப் பலத்த வெளிக்காட்டுறதிலயும் தான் எண்டு சொல்லுவினம். அப்பிடி பார்த்தா இப்ப மைத்திரியர விட மகிந்தர் தான் சிங்கள சனங்கள் மத்தியில முன்னுக்கு நிக்கிறார்.

Share This Post

Post Comment